இந்தியா

“கொரோனா காலத்தில் பா.ஜ.க அரசின் சாதனைகள்” - ராகுல் காந்தி கிண்டல்!

கொரோனா காலத்தில் பா.ஜ.க அரசின் சாதனைகள் எனக் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார் ராகுல் காந்தி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா காலத்தில் பா.ஜ.க அரசின் சாதனைகள் எனக் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

இந்தியாவில் கொரோனா மிகவேகமாகப் பரவிய நிலையில், எந்தவித சரியான திட்டமிடலும் இல்லாமல் அமல் செய்யப்பட்ட ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்காக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, தொற்று பரவலும் இன்னும் குறைந்தபாடில்லை.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சரிவரச் செய்யவில்லை என தொடக்கம் முதலே சுட்டிக்காட்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. இந்நிலையில், பா.ஜ.க அரசின் சாதனைகள் எனக் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவிட் காலகட்டத்தில் அரசின் சாதனைகள் :

பிப்ரவரி : நமஸ்தே ட்ரம்ப்.

மார்ச் : ம.பி. அரசைக் கவிழ்த்தது.

ஏப்ரல் : மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்.

மே : பா.ஜ.க அரசின் ஆறாவது ஆண்டு கொண்டாட்டம்.

ஜூன் : பீகார் மெய்நிகர் பேரணி.

ஜூலை : ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.

இந்தச் சாதனைகளால் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தற்சார்பு எய்தியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories