இந்தியா

“அரசு இல்லத்திலிருந்து 1 மாதத்தில் பிரியங்கா காலி செய்யவேண்டும்”- பா.ஜ.க அரசு உத்தரவுக்குப் பின்னணி என்ன?

பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வீட்டை காலி செய்ய மத்திய பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது.

“அரசு இல்லத்திலிருந்து 1 மாதத்தில் பிரியங்கா காலி செய்யவேண்டும்”- பா.ஜ.க அரசு உத்தரவுக்குப் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வீட்டை காலி செய்ய மத்திய பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமரின் மகள் என்பதாலும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்ததாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரியங்கா காந்திக்கு புதுடெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் அரசு இல்லம் பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரியங்கா தங்கியுள்ள அரசு வீட்டை இன்னும் ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் என்று இன்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அவருக்கு வழங்கியிருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒதுக்கியிருந்த அரசு வீடு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு உத்தரவில் கூறியுள்ளது.

இதுதொடர்பாக பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“அரசு இல்லத்திலிருந்து 1 மாதத்தில் பிரியங்கா காலி செய்யவேண்டும்”- பா.ஜ.க அரசு உத்தரவுக்குப் பின்னணி என்ன?

அதில், சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு மற்றும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு ஆகியவை பிரியங்கா காந்திக்கு கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் திரும்பப் பெறப்பட்டது. எனவே அவர் அரசு பங்களாக்களில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்.

ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் பிரியங்கா காந்தி அரசு பங்களாவை காலி செய்திருக்க வேண்டும். அதற்கு மேல் அவர் அரசு இல்லத்தில் தங்கியிருந்தால் அதற்கு அவர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஊரடங்கு குளறுபடிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்டவற்றில் மத்திய அரசை பிரியங்கா காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பதால் மத்திய அரசு இந்த பழிவாங்கும் நடவடிக்கையை இந்நேரத்தில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories