இந்தியா

“ப்ளூ பிரிண்ட் கிடையாது; 40% திறனறிவு வினாக்கள்” :தொடரும் பொதுத்தேர்வு குளறுபடி- பலிகடாவாகும் மாணவர்கள்!

‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுதும் 50,000 மாணவர்களுக்காக லட்சக்கணக்கான மாணவர்களை பலிகடா ஆக்குவது நியாயமா? என ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“ப்ளூ பிரிண்ட் கிடையாது; 40%  திறனறிவு வினாக்கள்” :தொடரும் பொதுத்தேர்வு குளறுபடி- பலிகடாவாகும் மாணவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ப்ளூ பிரிண்ட் வழங்கப்பட மாட்டாது என்றும் பொதுத்தேர்வு வினாத்தாளில் 40 சதவீதம் வரை திறனறிவுக் கேள்விகள் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களின் கல்வி விவகாரங்களில் மோசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

பொதுவாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்தப் பகுதியில் இருந்து கேள்விகள் வரும், 1, 5, 10, 20 மதிப்பெண் வினாக்கள் எந்தெந்தப் பாடத்தில் இருந்து கேட்கப்படும் என்பது குறித்து ப்ளூ பிரிண்ட் ( வினாத்தாள் கட்டமைப்பு ) கொடுக்கப்படும். அதன் மூலம் முக்கியப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் படிப்பார்கள். இது மாணவர்களின் அழுத்தத்தைக் குறைக்கும்.

“ப்ளூ பிரிண்ட் கிடையாது; 40%  திறனறிவு வினாக்கள்” :தொடரும் பொதுத்தேர்வு குளறுபடி- பலிகடாவாகும் மாணவர்கள்!

ஆனால், தற்போது அ.தி.மு.க அரசின் பள்ளிக்கல்வித்துறை புளூ பிரிண்ட் இல்லை என அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் வழக்கத்திற்கு மாறாக வினாத்தாளில் திறனறிவுக் கேள்விகள் அதிகளவில் இடம்பெறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நடப்பு நிதியாண்டில் பொதுத்தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருக்கும். கணிதம், விலங்கியல், இயற்பியல் போன்ற பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் கேட்கப்படும். மேலும் 10 முதல் 20 சதவீத வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பினால் மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தாண்டி விரிவாக படிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ‘சென்டம்’ எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையும். மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடையவும் வாய்ப்புள்ளது.

“ப்ளூ பிரிண்ட் கிடையாது; 40%  திறனறிவு வினாக்கள்” :தொடரும் பொதுத்தேர்வு குளறுபடி- பலிகடாவாகும் மாணவர்கள்!

இதனால் மாணவர்களின் கற்றலில் இடைநிற்றல் அதிகரிப்பதோடு, தற்கொலைகளும் அதிகரிக்கக் கூடும். இதுபோல அரசு செய்வது பிற நுழைவுத் தேர்விற்கு பயன்தரும் எனக் கூறுகிறார்கள். இதனால் எழும் கேள்வி என்னவென்றால் தமிழகத்தில் நீட் எழுதும் 50,000 மாணவர்களுக்காக லட்சக்கணக்கான மாணவர்களை பலிகடா ஆக்குவது நியாயமா?

மேலும், ப்ளூ பிரிண்ட் இல்லை என்றதும் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது தேர்வுக்கு ஒருமாதம் முன்பு வெளியிடுவதாக கூறிவந்தனர். தற்போது இல்லை என்கிறார்கள். 20 ஆண்டுகளாக பின்பற்றிவந்த ஒரு முறையை ரத்து செய்வது மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு மட்டும் கேள்வித்தாள் வடிவமைப்பு குறித்த புரிதல் கிடைப்பதற்காக மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் இருந்தும் கேள்விகள் வரும் என பள்ளிக்கல்வித் துறை உறுதியாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories