இந்தியா

"எங்க மெஜாரிட்டியை 7 மணிக்கு பாருங்க” - சிவசேனா கூட்டணி அதிரடி அறிவிப்பு!

“எங்களின் மெஜாரிட்டியை இன்று இரவு 7 மணிக்கு மும்பை ஹயாத் ஓட்டலில் வந்து பாருங்கள்” என அதிரடியாக அறிவித்துள்ளார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.

"எங்க மெஜாரிட்டியை 7 மணிக்கு பாருங்க” - சிவசேனா கூட்டணி அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங். கூட்டணியின் மெஜாரிட்டியை இன்று இரவு 7 மணிக்கு மும்பை ஹயாத் ஓட்டலில் வந்து பாருங்கள்” என அதிரடியாக அறிவித்துள்ளார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.

மஹாராஷ்டிர அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பா.ஜ.க - சிவசேனா இடையே கூட்டணி ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்ட பிறகு, சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவுக்கு வருவதற்குள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பின்னர், மீண்டும், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டு ஆட்சியமைக்கத் தயாரான நிலையில் குறுக்கே புகுந்து ஆட்டத்தைக் கலைத்தார் அஜித் பவார்.

"எங்க மெஜாரிட்டியை 7 மணிக்கு பாருங்க” - சிவசேனா கூட்டணி அதிரடி அறிவிப்பு!

அஜித் பவார் துணையோடு, முதல்வராக அவசர அவசரமாக பொறுப்பேற்ற தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் நீடிப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும், மூன்று கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், நாளை பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிஸுக்கு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தக் கூட்டணியில் அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது தற்போது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்” என மகாராஷ்டிர ஆளுநரைக் குறிப்பிட்டு அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் பக்கமுள்ள 162 எம்.எல்.ஏ.,க்களுடன் மும்பை ஹயாத் ஹோட்டலில் ஒன்றாக அணிவகுக்க இருக்கிறோம். யார் வந்து வேண்டுமானாலும் எங்களின் பெரும்பான்மையை பார்த்துக் கொள்ளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories