இந்தியா

“வேலையிழப்பும், வேலைவாய்ப்பின்மையும் பாஜக ஆட்சியில் தொற்றுநோயாக பரவுகிறது” - பிரியங்கா காந்தி சாடல்!

நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை பாஜக ஆட்சியின் தொற்றுநோய் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

“வேலையிழப்பும், வேலைவாய்ப்பின்மையும் பாஜக ஆட்சியில் தொற்றுநோயாக பரவுகிறது” - பிரியங்கா காந்தி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடுவதால் பல லட்சம் பேர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இதற்கு எதிராக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு வகையில் குரலெழுப்பியும், குற்றஞ்சாட்டியும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். இருப்பினும், பாஜக அரசோ பொருளாதார மந்த நிலையே இந்தியாவில் ஏற்படவில்லை என்ற தொணியில் சமாளித்து வருகிறது.

“வேலையிழப்பும், வேலைவாய்ப்பின்மையும் பாஜக ஆட்சியில் தொற்றுநோயாக பரவுகிறது” - பிரியங்கா காந்தி சாடல்!

இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை உருவாகி இருப்பது வளர்ச்சி எனும் சக்கரத்தை நிறுத்துவதற்கான அறிகுறியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது பாஜக ஆட்சியில் ஒரு தொற்றுநோயை போல் உருவாகியுள்ளது என குற்றஞ்சாட்டிய அவர், கட்டுமானத் துறையில் மட்டும் 35 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“வேலையிழப்பும், வேலைவாய்ப்பின்மையும் பாஜக ஆட்சியில் தொற்றுநோயாக பரவுகிறது” - பிரியங்கா காந்தி சாடல்!

அதேபோல், மிகப்பெரிய ஐடி நிறுவனங்களும் 40 லட்சம் வேலை வாய்ப்புகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறது என்றும் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories