இந்தியா

“நகை வேண்டாம்; ஆயுதங்களை வாங்கிக் குவியுங்கள்”: அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

அயோத்தி தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் மக்கள் நகைகளுக்குப் பதிலாக ஆயுங்கள் வாங்கிக் குவிக்கவேண்டும் என உத்தர பிரதேச பா.ஜ.க தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நகை வேண்டாம்; ஆயுதங்களை வாங்கிக் குவியுங்கள்”: அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கு தற்போது தான் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில், ஒரு மாத காலத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.கவினர் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் எனக் கூறி நீதிமன்றத்தை அவமதிக்கும் வேலையைச் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தந்தேரஸ் பண்டிகைக்கு மக்கள் நகைகள் வாங்காமல் ஆயுதங்கள் வாங்குமாறு பா.ஜ.க தலைவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் தீபாவளிக்கு முன்னதாகக் கொண்டாடப்படும் தந்தேரஸ் (Dhanteras) என்ற பண்டிகைக்கு மக்கள் நகைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதன்படி இந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி அந்தப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் டியோபந்த் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.கவின் டியோபந்த் நகர் தலைவர் கஜ்ராஜ் ரானா கலந்துகொண்டார்.

கஜ்ராஜ் ரானா
கஜ்ராஜ் ரானா

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய கஜ்ராஜ் ரானா, “அயோத்தி வழக்கில் அந்த இடத்தில் ராமர் கோயில் வரவேண்டும் என்பதே மக்களின் ஆசை. இந்தச் சூழலில் அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு வரவுள்ளது. அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று தீர்ப்பைப் பற்றி பேசி நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “வரவிருக்கும் தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, நாம் கொண்டாடும் தந்தேரஸ் பண்டிகைக்கு நீங்கள் ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதற்குப் பதிலாக இரும்பு ஆயுதங்கள், வாள் போன்ற ஆயுதங்களை வாங்கிக் கொள்ளுங்கள். அது நல்லது, குறிப்பாக உரிய நேரத்தின்போது அந்த ஆயுதங்கள் நம்முடைய பாதுகாப்பிற்கு உதவும்” எனத் தெரிவித்தார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க தலைவருக்கு கண்டனங்கள் குவிந்துள்ளது. பலரும் தமது கருத்தை பா.ஜ.க தலைவர் திரும்பப் பெறவேண்டும் எனக் கூறிவருகின்றனர். இந்நிலையில், தனது கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்று வன்முறையைத் தூண்டுவது போலவே பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories