இந்தியா

பொருளாதார நிலையை சீரமைக்காமல் பாஜக அரசு தப்பித்து வருகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையை சீரமைக்காமல் மத்திய பாஜக அரசு தப்பிக்க பார்க்கிறது என உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொருளாதார நிலையை சீரமைக்காமல் பாஜக அரசு தப்பித்து வருகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோ மொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லேலாண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சரிவை சரிசெய்யாமல் மத்திய பாஜக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

விற்பனை சரிவால் உற்பத்தியை மேற்கொள்ளாமல் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து உற்பத்தி நிறுத்தி வரும் நிலையில் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் பணியில் இருந்து பாஜக அரசு விலகியே உள்ளது எனவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories