இந்தியா

“அவர்கள் வீட்டு பெண்களுக்கே பாதுகாப்பில்லை” கட்சி அலுவலகத்திலேயே மனைவியை தாக்கிய பா.ஜ.க தலைவர்! (வீடியோ)

டெல்லியில் பாஜக தலைவர் அவரது மனைவியை பாஜக அலுவலத்திலேயே தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அவர்கள் வீட்டு பெண்களுக்கே பாதுகாப்பில்லை” கட்சி அலுவலகத்திலேயே மனைவியை தாக்கிய பா.ஜ.க தலைவர்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் பா.ஜ.க.வினரே அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவோ பாலியல் வன்கொடுமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாக சட்டக் கல்லூரி மாணவி புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில். டெல்லியில் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் ஆசாத் சிங். இவருடைய மனைவி சரிதா சவுத்ரி. இருவரும் பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் என்பதுடன், சரிதா சவுத்ரி தெற்கு டெல்லி முன்னாள் மேயரும் ஆவார். அன்மைக்காலமாக இருவருக்கும் கருத்துவேற்பாடு இருந்து வந்துள்ளது. எந்த வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மனைவி சரிதா சவுத்ரியை, டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் பார்த்ததும், ஆசாத் சிங் ஆத்திரமடைந்துள்ளார். மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே, தனது மனைவி மீது வெறித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.

இது பா.ஜ.க அலுவலகத்திலிருந்த கண்காணிப்புக் கேமிராவிலும் பதிவாகியுள்ளது. பா.ஜ.க தலைவர் ஒருவர், பா.ஜ.க அலுவலகத்திலேயே அவரது மனைவியை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலரும் “பா.ஜ.க ஆட்சியில் மட்டுமல்லாமல், பா.ஜ.க-வினர் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை” என குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories