இந்தியா

“துப்பாக்கி குண்டு காயத்தை பஞ்சு வைத்து சரி செய்ய முடியாது” : ரிசர்வ் வங்கி நடவடிக்கையைக் கண்டித்த ராகுல்

மத்திய அரசுக்கு ரூ.1,76,051 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதை ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

“துப்பாக்கி குண்டு காயத்தை பஞ்சு வைத்து சரி செய்ய முடியாது” : ரிசர்வ் வங்கி நடவடிக்கையைக் கண்டித்த ராகுல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரிசர்வ் வங்கியின் கையிருப்புத் தொகையிலிருந்து 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசுக்கு ரூ.1,76,051 கோடியை வழங்க மத்திய வங்கியின் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பணியாற்றியபோது 3.6 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து பா.ஜ.க அரசுக்கு கொடுக்குமாறு நெருக்கடி தரப்பட்டது. அது இந்திய பொருளாதாரத்துக்குக் கேடாக முடியும் எனக் கூறி அவர் மறுத்துவிட்டார்.

ரகுராம் ராஜனுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த உர்ஜித் படேலும் மோடி அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிய மறுத்து இரண்டு ஆண்டுகளிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில், தான் பொருளாதார மேதமையற்றவர்களையும், பா.ஜ.க-வுக்கு சாதகமானவர்களையும் முக்கிய அதிகாரிகளாக நியமித்து ரிசர்வ் வங்கியை கைப்பற்றியது மோடி அரசு.

தற்போது, அவர்களின் திட்டப்படி பொருளாதார நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் கையிருப்புத் தொகை பெறப்படுகிறது. இந்த முயற்சி பொருளாதார வளர்ச்சிக்கும் ரிசர்வ் வங்கியின் ரேட்டிங்கிற்கும் பெரும் கேடாக முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

“துப்பாக்கி குண்டு காயத்தை பஞ்சு வைத்து சரி செய்ய முடியாது” : ரிசர்வ் வங்கி நடவடிக்கையைக் கண்டித்த ராகுல்

2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை தொகையான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை, சரியாக ரிசர்வ் வங்கியும் ஒதுக்கியிருப்பது தற்செயல் நிகழ்வா என காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியிருந்து பணத்தைத் திருடி பொருளாதார சீரழிவைத் தடுக்க நினைப்பது என்பது, துப்பாக்கிச்சூட்டுக் காயத்துக்கு பேண்ட் -எய்ட் ஒட்டுவது போன்றது என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories