இந்தியா

காணாமல் போன 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - ஆர்.டி.ஐ தகவலில் அதிர்ச்சி

வாங்கப்பட்ட மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 லட்சம் இயந்திரங்கள் கணக்கில் வராதது தெரிய வந்துள்ளது.

காணாமல் போன 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - ஆர்.டி.ஐ தகவலில் அதிர்ச்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய தேர்தல் ஆணையம் வாங்கிய மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) 20 லட்சம் இயந்திரங்கள் காணாமல் போன அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக ஃபிரண்ட்லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் கேட்ட ஆர்.டி.ஐ கேள்விகளில் தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையம் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்களை கொள்முதல் செய்கிறது. கொள்முதல் அளவு, அவை பாதுகாக்கப்படும் முறை, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முறை குறித்து தேர்தல் ஆணையத்திடம் ராய் ஆர்.டி.ஐ கேள்வியில் கேட்டுள்ளார்.

அதற்கு கிடைத்த பதிலில், வாங்கப்பட்ட மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 லட்சம் இயந்திரங்கள் கணக்கில் வராதது தெரிய வந்துள்ளது. 1989 - 2017 வரை ECIL (electronic corporation of India) நிறுவனத்திடமிருந்து 10,14,644 வாங்கப்பட்டுள்ளது. 1989 - 2015 வரை BEL ( Bharath Electronics limited) நிறுவனத்திடமிருந்து 10,05,662 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் பெல் நிறுவனத்திடம் கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ தகவலில், தங்கள் நிறுவனம் 19,69,932 இயந்திரங்களை கொடுத்துள்ளதாகவும், ECIL நிறுவனம் 19,44,593 இயந்திரங்களை தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காணாமல் போன 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - ஆர்.டி.ஐ தகவலில் அதிர்ச்சி

பெல் நிறுவனம் கொடுத்ததாக கூறும் 9,64,270 இயந்திரங்களும், ECIL கொடுத்ததாக கூறும் 9,29,949 இயந்திரங்களும் என மொத்தம் 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையம் கூறும் கணக்கில் இல்லை.

ஆண்டு வாரியாக வாங்கப்பட்ட இயந்திரங்களின் கணக்கிலும் முரண் உள்ளது. உதாரணமாக, 2003-2004 ஆண்டில் பெல் நிறுவனம் 1,93,475 இயந்திரங்களை கொடுத்ததாக கூறுகிறது. ஆனால், 1,67,850 இயந்திரங்களை தான் பெற்றோம் என்கிறது தேர்தல் ஆணையம். கிட்டத்தட்ட 25,625 இயந்திரங்கள் குறைவாக உள்ளன.

இயந்திரங்கள் வாங்க செய்யப்பட்ட செலவு கணக்கிலும், முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 2006 -2007 முதல் 2016-2017 வரையிலான காலத்துக்கு இயந்திரம் வாங்கிய மொத்த செலவு 536,01,75,485 ரூபாய் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், 652,56,44,000 ரூபாயை கட்டணமாக பெற்றாதாக பெல் நிறுவனம் கூறுகிறது. கிட்டத்த 116 கோடி ரூபாய் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியானால் அந்த 20 லட்சம் இயந்திரங்கள் எங்கே போயின?. என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திட பதில் இல்லை. தேர்தல் ஆணையத்திடம் சரியான கொள்முதல் கணக்கும், பழுதடைந்த இயந்திரங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன போன்ற தகவல்களை சேகரித்து வைக்க போதிய தொழில்நுட்பம் இல்லை என்கிறார் ராய்.

காணாமல் போன 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - ஆர்.டி.ஐ தகவலில் அதிர்ச்சி

இது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ராய் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்குமாறு பல முறை கூறிய பிறகு, தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அதிலும், சரியான தகவல் எதையும் கூறவில்லை. இதுகுறித்த அடுத்த வழக்கு விசாரணை ஜூலை 17-ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த கட்டுரை வெளியானதை அடுத்து, இதில் கூறப்பட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதிலும், தவறு நிகழவில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் எந்தக் தகவலையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    banner

    Related Stories

    Related Stories