தேர்தல்2021

“EPS, OPS டெல்லியில் அடகுவைத்த தமிழகத்தை மீட்க தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்-ம் சேர்ந்து தமிழகத்தை டெல்லியில் அடகுவைத்து விட்டனர். அதை மீட்டெடுக்க தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்.” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

“EPS, OPS டெல்லியில் அடகுவைத்த தமிழகத்தை மீட்க தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரத்தை மக்களாகிய நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள்” என மாதவரம், திருவொற்றியூர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாதவரம் தொகுதி வேட்பாளர் சுதர்சனம், திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் கே.பி.சங்கர் ஆகியோருக்கு ஆதரவாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறும். மக்களாகிய நீங்கள் அதில் மிகவும் உறுதுணையாக இருக்கிறீர்கள். தி.மு.க தலைவர் அவர்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்-ம் சேர்ந்து தமிழகத்தை டெல்லியில் அடகுவைத்து விட்டனர். அதை மீட்டெடுக்க தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும். மாதவரம், திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர்களை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பிரச்சாரத்திற்கு நாளை வரையே நேரம் இருப்பதால், மக்கள் அனைவரும் தி.மு.கவின் வெற்றியை அனைவரிடத்திலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

நான் முதல்முறையாக தேர்தலில் களம் காண்கிறேன். என் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் அதிகமாக பிரசாரம் செய்துள்ளேன். முத்தமிழறிஞர் கலைஞர் 3 முறை நின்று வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். அடிமை ஆட்சியை ஒழித்துக்கட்டுவோம்.

ஏப்ரல் 6ஆம் தேதி வாக்கு சாவடிக்கு சென்று அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். திமுக தலைவர் அவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியை நோக்கி வாக்களித்த அனைவரும் காத்திருங்கள்.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories