தி.மு.க

வீடியோகால் மூலம் பேசிய மு.க.ஸ்டாலின் : "மக்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்" - நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!

ஊரடங்கு காரணமாக மாவட்டங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைக் குறித்தும், மாவட்ட நிலைமைக் குறித்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளும் வீடியோகால் மூலம் ஆலோசனை நடத்தினர்.

வீடியோகால் மூலம் பேசிய மு.க.ஸ்டாலின் : "மக்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்" - நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய. மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றன.

ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்டவையால் பெரும்பாலான மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் அவதி படுகின்றனர்.

மக்களின் இந்த சூழலைப் புரிந்துக்கொண்டு தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிதியுதவி வழங்கியும் மருத்துவ உபகரணங்களுக்கும் நிதியையும் ஒதுக்கியுள்ளனர்.

மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைக்களை சரி செய்யுமாறும், மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறும் வலியுறுத்தினார். அதன்படி தி.மு.க எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கை தங்கள் மாவட்டங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பணிகள் குறித்தும் மாவட்டத்தில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிலைமைக் குறித்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மூர்த்தி, கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்டோரிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டுபேசினார்.

அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டதா? வீடுகள் தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு உதவிகள் ஏதேனும் செய்யப்பட்டிருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

மேலும், மக்கள் செயலாளர்களாக செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். கொரோனா காலத்தில் தி.மு.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த அக்கறை மிகுந்த செயலுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories