தி.மு.க

"நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரியும் கோவை மாநகர் மாவட்டம்” - பேராசிரியர் அறிவிப்பு!

கோவை மாநகர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

"நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரியும் கோவை மாநகர் மாவட்டம்” - பேராசிரியர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவை மாநகர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின்வருமாறு :

கோவை மாநகர் கிழக்கு மாவட்டம்

57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் தற்போதைய கோவை மாநகர் மாவட்டத்தில் மேலும் 14 வார்டுகள் புதியதாக சேர்க்கப்பட்டு 71 வார்டுகள் கொண்ட "கோவை மாநகர் கிழக்கு மாவட்டம்" அமையும்.

1. கோவை தெற்கு தொகுதி- 19 வார்டு

2. சிங்காநல்லூர் தொகுதி- 19 வார்டு

கோவை வடக்கு தொகுதி - 19 வார்டு

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகம் - 7 வார்டு

குனியமுத்தூர் பகுதி கழகம் - 7 வார்டு

ஆகிய 71 வார்டுகள் கொண்டதாக புதிய "கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் " அமைவதோடு, அதன் பொறுப்பாளராக நா.கார்த்திக், எம்.எல்.ஏ தொடர்ந்து செயல்படுவார்.

கோவை மாநகர் மேற்கு மாவட்டம்

புதியதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக மு.முத்துசாமி நியமனம்.

கவுண்டம்பாளையம் பகுதி -11 வார்டுகள்

சரவணம்பட்டி பகுதி - 11 வார்டுகள்

குறிச்சி பகுதி - 7 வார்டுகள்

ஆகிய 29 வார்டுகள் கொண்டதாக "கோவை மாநகர் மேற்கு மாவட்டம்" அமைவதோடு, இம்மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக மு.முத்துசாமி நியமிக்கப்படுகிறார்.

கோவை வடக்கு மாவட்டம்

ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவை வடக்கு மாவட்டம் பின்வரும் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகரக் கழகங்கள் கொண்டதாகவும், கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக சி.இராமச்சந்திரன் தொடர்ந்து செயல்படுவார்.

மேட்டுப்பாளையம் தொகுதி

மேட்டுபாளையம் நகரம்

காரமடை கிழக்கு

காரமடை மேற்கு

கவுண்டம்பாளையம் தொகுதி

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம்

சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம்

தொண்டாமுத்தூர் ஒன்றியம்

கோவை தெற்கு மாவட்டம்

கோவை தெற்கு மாவட்டம் ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவை தெற்கு மாவட்டம் பின்வரும் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகரக் கழகங்கள் கொண்டதாகவும், கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் தொடர்ந்து செயல்படுவார்.

வால்பாறை சட்டமன்ற தொகுதி

வால்பாறை நகரம்

ஆனைமலை ஒன்றியம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி

பொள்ளாச்சி நகரம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம் கிணத்துக்கடவு மேற்கு (பாதி)

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் (பாதி)

மதுக்கரை ஒன்றியம் சூலூர் சட்டமன்ற தொகுதி

சூலூர் வடக்கு ஒன்றியம்

சூலூர் தெற்கு ஒன்றியம்

சுல்தான் பேட்டை ஒன்றியம்

------------

"நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரியும் கோவை மாநகர் மாவட்டம்” - பேராசிரியர் அறிவிப்பு!

முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த கே.என்.நேரு தி.மு.க-வின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், திருச்சி வடக்கு- திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு-திருச்சி மத்திய- திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாக திருச்சி பிரிக்கப்பட்டன. இந்த பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களாக,

முசிறி, துறையூர் மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜன்,

திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக வைரமணி,

திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories