தி.மு.க

“எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை அரசு மட்டுமல்ல; குரங்கு வித்தை அரசு” : ஆ.ராசா பேச்சு!

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தி.மு.க பின்வாங்கவில்லை; பா.ஜ.க தான் பின்வாங்கியுள்ளது” எனப் பேசியுள்ளார் ஆ.ராசா எம்.பி.,

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை வில்லிவாக்கம் கிழக்கு தி.மு.க சார்பில் தி.மு.க முப்பெரும் விழா பொதுக்கூட்டம் அயன்புரம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு மாதம் இருப்பது போல் திராவிட இயக்கத்திற்கு இந்த செப்டம்பர் மாதம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரால் தான் தமிழ்நாடு இன்று திராவிட இயக்கத்தின் பூமியாகத் திகழ்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக வாழ்ந்தவர் கலைஞர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தி.மு.க பின்வாங்கவில்லை; அவர்கள்தான் பின் வாங்கி உள்ளனர். தமிழக ஆளுநரே இந்த விஷயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கட்டுப்பட்டுள்ளார்.

நீட் தேர்வில் என்ன நடந்தது என்ற இந்த மாநில அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. நீட் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு தீர்மானம் எழுதியதா காதல் கடிதம் எழுதியதா எனத் தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை அரசு மட்டுமல்ல; குரங்கு வித்தை அரசு. “ஆடுறா ராமா ஆடுறா ராமா” என்று மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறது. மாநிலத்தை ஆளும் கோமாளித்தனமான அரசையும் மத்தியில் இருக்கும் மதவெறி அரசையும் தூக்கி எறிய தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories