தி.மு.க

“குருகுல கல்வியை அமல்படுத்தவே புதிய கல்விக்கொள்கை” : திருச்சி சிவா பேட்டி!

புதிய கல்விக்கொள்கை கருத்துக் கேட்பு குறித்து திருச்சி சிவா எம்.பி., பேட்டியளித்துள்ளார்.

 “குருகுல கல்வியை அமல்படுத்தவே புதிய கல்விக்கொள்கை” : திருச்சி சிவா பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று முதல் முன்று நாட்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபெற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர்.

தி.மு.க சார்பில் புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்யக் குழு நியமிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஏற்கனவே மத்திய அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, “புதிய கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டுள்ள கருத்துகள் குருகுல கல்வி முறையை அமல்படுத்துவது போன்று உள்ளது.

நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல இந்த கல்விக் கொள்கை உதவுவதாக இருக்கிறது. கல்வியை தனியார் மயமாக்கவே இது உதவும். எனவே, புதிய வரைவு கொள்கையை இன்றைய கருத்துக் கேட்பு கூட்டத்திலும் கடுமையாக தி.மு.க எதிர்த்துள்ளது.

இந்த கல்விக் கொள்கையால் ஆயிரம் பள்ளிகள் மூடக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மும்மொழிக் கொள்கையை முழுமையாக எதிர்க்கிறோம். இருமொழிக் கொள்கையே தமிழகத்திற்கு போதுமானது. கல்வியை தனியார் மயமாக்குவதற்கான திட்டத்தைத்தான் பா.ஜ.க முயற்சித்து வருகிறது.

ஏழை எளியவர்களுக்கு கல்வியறிவை கொடுக்காமல் பள்ளிக் குழந்தைகளுக்கு அதிக சுமையை கொடுக்கும் விதமாகத்தான் இந்த புதிய கல்விக் கொள்கை உள்ளது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories