தி.மு.க

பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும்- கனிமொழி எம்.பி திட்டவட்டம் 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

kanimozhi m.p
twitter kanimozhi m.p
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை பலரையும் கவலையடைச் செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக-வினர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதற்காக கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், கோவை வருவாய் கோட்டாச்சாரியார் ரவிக்குமாரிடம் அனுமதி கோரினார்.

ஆனால் அவர் தேர்தல் விதிகளை காரணம் காட்டி, திமுக-வின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, போலீஸ் அனுமதிக்காவிட்டாலும் பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories