Corona Virus

15-18 வயதுக்குட்பட்டவர்களே கவனம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

15-18 உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

15-18 வயதுக்குட்பட்டவர்களே கவனம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஒரேயொரு பேராயுதமாக கருதப்படுவது தடுப்பூசிதான். அதன்படி இந்தியாவில் மட்டும் 160 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இப்படி இருக்கையில், 15-18 உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், 15-18 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதலின் படி 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி 01.01.2023 தேதியின்படி 15 வயதை எட்டியவர்கள் தகுதியுடையவர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

2005,2006, மற்றும் 2007 இல் பிறந்தவர்கள் 01.01.2023 படி 15 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அடைபவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி.

2004 இல் பிறந்து 01.01.2023 முதல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அடைபவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி.

1962 இல் பிறந்து 01.01.2023 முதல் 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அடைபவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி.

தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் இருந்து தவறி விடக்கூடாது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories