Corona Virus

ஒரே வாரத்தில் ₹3.45 கோடி அபராதம் விதிப்பு: ’மக்களே கவனம்’ காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள்து.

ஒரே வாரத்தில் ₹3.45 கோடி அபராதம் விதிப்பு: ’மக்களே கவனம்’ காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினரால் ஜனவரி 7ம் தேதி முதல் கடந்த ஒரு வாரத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கில் விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள்து.

முகக்கவசம் அணியாமல் இருந்ததால் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 329 நபர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 1,910 நபர்கள், 1,552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

254 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு 96 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாதவர் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதற்காக 43 ஆயிரத்து 417 நபர்களிடம் இருந்து 86 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது,

வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 நபர்களிடம் 83 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பொது இடங்களில் சமூக விலகலை கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories