இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
அவ்வகையில், பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்றின் பாதிப்பு நீடித்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் தொற்று உறுதியான 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்பட்டதன் பிறகே வைரஸின் நிலை தெரிய வந்திருக்கிறது.
அதன்படி பாசிட்டிவ் மாதிரிகளை ஆர்.என்.ஏ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புதிய சோதனையில், தனிமைப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்கும் மேலாக நீடித்திருப்பது கண்டறியப்பட்டது.
13 சதவிகித பேரின் உடலில் குறிப்பிட்ட காலவரையறைக்கு மேல் கொரோனா உயிர்ப்புடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் போய்விட்டது என அலட்சியமாக இருக்கக் கூடாது.
ஏனெனில் இப்படி வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்பட்சத்தின் இதனால் பலருக்கும் பரவி ஆபத்து ஏற்படக் கூடும் என எக்ஸிடர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் லோர்னா ஹாரிஸ் கூறியுள்ளார். ஆகவே 10 நாள் தனிப்படுத்தும் முறை போதுமானதாக இருக்காது என ஆய்வு முடிவு மூலம் அறியப்படுகிறது.