தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
மேலும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து அமலில் உள்ளது.
ஆகவே பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், சென்னை பெருநகர காவல்துறையின் கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம் 9498181236 , 9498181239 , 72007 06492 மற்றும் 7200701843 ஆகிய 4 செல்போன் எண்களை அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா ஊரடங்கு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற சென்னை பெருநகர காவல்துறையின் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் உள்ள மேற்படி 94981 81236, 9498181239,72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய உதவி மைய எண்களுக்கு 24 X 7 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண். 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் SOS செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.