Corona Virus

கொரோனாவால் கோமாவுக்கு சென்ற செவிலியர் வயகராவால் உயிர் பிழைத்தது எப்படி? - பிரிட்டனில் நடந்த சுவாரஸ்யம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதுடன் கோமாவுக்கு சென்றுள்ளார். அவரை பிழைக்க வைக்க மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கொரோனாவால் கோமாவுக்கு சென்ற செவிலியர் வயகராவால் உயிர் பிழைத்தது எப்படி? - பிரிட்டனில் நடந்த சுவாரஸ்யம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரிட்டனின் லிங்கன்ஷயரைச் சேர்ந்தவர் மோனிகா அல்மெய்தா. 37 வயதான இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய போதும் இங்கிலாந்தி அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கு மோனிகாவும் தப்பவில்லை.

அதன்படி கொரோனா பாதிப்புக்கு ஆளான செவிலியர் மோனிகா கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். மேலும் சுவாச பிரச்னையும் ஏற்பட்டதால் தொடர்ந்து 28 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலை கோமாவில் இருந்து மோனிகாவை மீட்கும் வகையில் மருத்துவர்கள் தங்களது உயர் சிகிச்சையில் முக்கியமான முறை ஒன்றினை பயன்படுத்தியுள்ளனர்.

அதன்படி, வயகரா மருந்தை கோமாவில் உள்ள மோனிகாவுக்கு அதிகளவில் அளித்திருக்கிறார்கள். ஏனெனில் வயகரா மருந்து ரத்த ஓட்டத்தை வேகமாக்கும் என்பதால் அது கொடுக்கப்பட்டிருக்கிறதாம். வயகரா மருந்து அளிக்கப்பட்டதும் மோனிகா கோமாவில் இருந்து மீண்டிருக்கிறார்.

இதனையடுத்து ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வயாகரா மருந்தை பயன்படுத்தினால் பலன் கிடைக்குமா என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories