Corona Virus

தடுப்பூசி போட்டவரை கைது செய்த கர்நாடக போலிஸ்; என்ன காரணம் தெரியுமா? - பெலகாவியில் நடந்த ருசிகரம்!

பெலகாவியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவரை போலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போட்டவரை கைது செய்த கர்நாடக போலிஸ்; என்ன காரணம் தெரியுமா? - பெலகாவியில் நடந்த ருசிகரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் முறை உலகம் முழுவதும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஒன்றிய மாநில அரசுகள் தரப்பில் மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இரு தவணை தடுப்பூசிகளும் தவறாமல் செலுத்தும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா மீதான அச்சம் காரணமாக ஒரு நபர் 8 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவில் மாட்டத்தில் சார்லிராய் நகரைச் சேர்ந்தவர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இரண்டு தவணை முறையாக தடுப்பூசி செலுத்தியிருந்த இந்த நபர் கொரோனா மீதான பயத்தால் போலியாக ஆவணங்கள் தயாரித்து 8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்.

9வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக சென்ற போது அவரது ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவற்றில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் போலியானவை என்று சுகாதார ஊழியர்களுக்கு தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து பெலகாவி போலிஸாருக்கு தகவல் தெரியபடுத்தப்பட்டதும் சம்மந்தப்பட்ட அந்த நபரை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறது.

அதில் அந்த நபர் ஏற்கெனவே 8 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் அவருக்கு எந்த பின்விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories