இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவல 415 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலின் மூன்றாவது அலை பிப்ரவரி மாதம் உச்சம் தொடும் என கான்பூர் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி, காஸியன் மிக்சர் மாடல் எனும் புள்ளியல் சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் டிசம்பரில் தொடங்கும் மூன்றாவது பிப்ரவரி மாதம் தொடக்கத்தின் போது உச்சத்தை தொடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கொரோனா சூப்பர் மாடல் குழுவினரும் 2022 தொடக்கத்தில் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என கூறியிருந்தது. ஆனால் இரண்டாவது அலை போன்ற மிகப்பெரிய பாதிப்பை இது ஏற்படுத்தாது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒமைக்ரான் சிகிச்சை தொடர்பாக டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் பேசுகையில் ஒமைக்ரான் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுவிடவில்லை.
அனுமதிக்கப்பட்ட பெரும்பாலானோர்களுக்கு லேசான அறிகுறிகளே இருப்பதாகவும் காய்ச்சல் மற்றும் வைட்டமின் மாத்திரைகளிலேயே குணமாவதாகவும் கூறியிருக்கிறார்கள்.