Corona Virus

தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான்; தொடர்பில் இருந்தோருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு - பரபரப்பு தகவல் இதோ!

தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான்; தொடர்பில் இருந்தோருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு - பரபரப்பு தகவல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் மரபணு மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்றால் உலகளவில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த ஒமைக்ரான் வகை வைரஸுக்கு 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது,

“அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வந்தோரில் 15,250 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 57 நபர்களுக்கு s ஜீன் மரபியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய வைராலஜி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டதில் நேற்றிரவு 60 பேர் மாதிரி சோதிக்கப்பட்டு 33 நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது. அந்த 34 பேருக்கும் மிதமான பாதிப்புதான் உள்ளது. சென்னையில் 26 பேருக்கும் திருவண்ணாமலையில் 2 பேருக்கும், மதுரையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும், கேரளாவில் ஒருவருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாதிரி அனுப்பப்பட்ட 57 பேரில் 23 பேரின் முடிவு வர உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 4,275 நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோர் 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரில் 18 வயதுக்கு கீழ் உள்ள இருவர் தவிர அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories