Corona Virus

தொடர்ந்து உயரும் ஒமைக்ரான் பாதிப்பு; அமலாகிறதா இரவு நேர ஊரடங்கு? - ஒன்றிய அரசின் கடிதத்தால் பரபரப்பு!

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

தொடர்ந்து உயரும் ஒமைக்ரான் பாதிப்பு; அமலாகிறதா இரவு நேர ஊரடங்கு? - ஒன்றிய அரசின் கடிதத்தால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்டா வகை கொரோனாவை விட மூன்று மடங்கு வேகமாக ஒமைக்ரான் தொற்று பரவுவதன் காரணமாகவும், நாட்டின் பல்வேறு பகுதியில் இன்னமும் டெல்டா வகை தொற்றாளர்கள் இருக்கும் வேளையில் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் போர்க்கால அடிப்படையில் அவசரகால மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டங்களில் 10 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்.

சரியான நேரத்தில் ஒமைக்ரான் பரவலை கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால் விரைந்து பரவிவிடும். எனவே உள்ளூரில் மாவட்ட அதிகாரிகள் தொற்றாளர்களை உன்னிப்பாக கையாள வேண்டும்.

திருமணம், இறுதிச் சடங்குகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அலுவலகம் வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.

ஒமைக்ரான் தொற்று இல்லாவிட்டாலும் இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். புதிய வகை கொரோனாவினால் லேசான பாதிப்பு இருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடும் போது பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயம் எழலாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகாறும் இந்தியாவில் 213 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories