Corona Virus

பிப்ரவரியில் உச்சமடையும் ஒமைக்ரான்; 3வது அலைக்கு தயாராகிறதா இந்தியா? - சூப்பர் மாடல் குழு எச்சரிக்கை மணி!

இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை குறித்து கோவிட் சூப்பர் மாடல் குழுவில் தலைவர் வித்யாசாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிப்ரவரியில் உச்சமடையும் ஒமைக்ரான்; 3வது அலைக்கு தயாராகிறதா இந்தியா? - சூப்பர் மாடல் குழு எச்சரிக்கை மணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் உச்சத்தில் இருந்த போது நாடு முழுவதும் மரண ஓலங்களே ஒலித்து வந்தது.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த பிறகு மக்கள் சற்று இயல்பு நிலைக்கு திரும்பி மூச்சுவிடத் தொடங்கினர். இந்த நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மீண்டும் மிரட்டத் தொடங்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை கொரோனாவால் இந்தியா உட்பட 90 நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமே டிசம்பர் 18ம் தேதியின் நிலவரப்படி 126 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 43, டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 14, தெலங்கானாவில் 8, குஜராத்தில் 7, கேரளாவில் 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தலா 1 என 126 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ஒமைக்ரான் பரவல் காரணமாக மூன்றாவது அலை உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட கொரோனா வைரஸை தடுக்கும் சூப்பர் மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும். இருப்பினும் இரண்டாது அலையை விட லேசான பாதிப்புகளை ஒமைக்ரான் ஏற்படுத்தினாலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவிலேயே இருக்கும். ஆனால் டெல்டாவை போன்ற தினசரி பாதிப்பு இருக்காது எனக் கூறியுள்ளார்.

இருந்த போதிலும் மக்கள் முறையாக கொரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டம் கூடாது இருத்தல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories