சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுசுகாதரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்க்ளை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழத்தில் உள்ள 11 லட்சம் கர்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களும், 9 லட்சம் குழந்தைகள் இந்த தடுப்பூசி குறித்த குறுஞ்செய்தி திட்டம் மூலம் பயனடைவார்கள் என்றார். இதுபோல முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை பெறுவதற்கும் இந்த குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
தமிழகத்திற்கு High risk - நாட்டில் இருந்து வந்த 12767 பேருக்கும், மற்ற வெளிநாட்டில் இருந்து வந்த 2101 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக 14868 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதில் 5 பேருக்கு மறு ஆய்வில் நெகட்டிவ் வந்துள்ளதை அடுத்து 65 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28 பேருக்கு s gene drop என்ற ஒமிக்ரான் வகை கொரோனா அறிகுறி இருப்பதாகவும் அவர்கள் மரபணு முடிவுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர், ஆக்சிஜன் வசதி இவர்களுக்கு தேவைப்படவில்லை லேசான அறிகுறி மட்டுமே உள்ளது என்றார். கொரோனா கண்டறியப்பட்டவர்கள் மாதிரிகள் பெங்களுருக்கு அனுப்பி உள்ள நிலையில் 10 பேர் முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் 8 பேருக்கு டெல்டா, ஒருவருக்கு ஒமிக்ரான், ஒரு வருக்கு non sequence வந்துள்ளது அவருக்கு மட்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றார்.
non risk நாடுகளில் இருந்து வந்தவர்களுக்குதான் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றவர், high risk நாட்டுக்கு மட்டும் இன்றி, வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் வீடுகளில் தனிமை படுத்திக்கொண்டு 7 நாட்களுக்கு பின்னர் RT-PCR பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர்கள் அனைவருக்கும் விமானநிலையத்திற்கு வந்தவுடன் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்குமாறும் கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.
ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய 278 நபர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போது தெரிவித்தார்.