Corona Virus

இந்தியாவில் 100ஐ தொட்டது ஒமைக்ரான்; 2ம் அலையை போன்று கோட்டைவிடாமல் காக்குமா மோடி அரசு?

மரபணு மாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றுக்கு இந்தியாவில் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 100ஐ தொட்டது ஒமைக்ரான்; 2ம் அலையை போன்று கோட்டைவிடாமல் காக்குமா மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 எனும் கொரோனா தொற்று டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாறி வந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் என தனது மரபணுவை மாற்றிக் கொண்டு உலகின் 80 நாடுகளில் பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை கொரோனாவால் தற்போது இந்தியாவில் 101 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ICMR இயக்குநர், ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர், கொரோனா தடுப்புக்குழுத் தலைவர் என மூவரும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், உலகின் 91 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. டெல்டா வகை மாறுபாட்டை விட ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000க்கும் கீழ் உள்ளது. இதில் 40 சதவிகித பங்கு கேரளாவுடையதாகும். தற்போது ஒமைக்ரான் வகை தொற்று 11 மாநிலங்களில் 101 பேருக்கு இருப்பதாக பதிவாகியுள்ளது.

இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படாது என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. உலகளவில் இந்தியாவில்தான் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அமெரிக்காவை விட 4.8, பிரிட்டனை விட 12.5 மடங்கும் அதிகமாக தடுப்பூசிகள் போடப்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, “முக்கியத்துவம் இல்லாத பயணங்களை இந்த காலக்கட்டங்களில் தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories