Corona Virus

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்; பூஸ்டர் டோஸுக்கு வருகிறதா புதிய தடுப்பூசி? - உயர்மட்டக்குழு ஆலோசனை!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதாக இருந்தால், அது முதல் இரண்டு டோஸ் தடுப்பூசியிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசனை.

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்; பூஸ்டர் டோஸுக்கு வருகிறதா புதிய தடுப்பூசி? - உயர்மட்டக்குழு ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது குறித்து கடந்த வாரம் தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தியது.

அந்த அலோசனைக் கூட்டத்தில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதாக இருந்தால் ஏற்கனவே போடப்பட்ட முதல் இரண்டு தடுப்பூசிக்கு பதிலாக மூன்றாவது ஒரு புதிய தடுப்பூசிதான் போடப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாகப் போடப்படும் டோஸ் புதிய வகையைச் சேர்ந்ததாக இருந்தால்தான் அது கூடுதல் பலனளிக்கும் என்ற ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குழுவானது விரைவில் அரசுக்கு பரிந்துரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது டோஸ் வழங்குவதாக இருந்தால் ஹைதராபாத் நிறுவனத்தின் CORBEVAX, சீரம் நிறுனத்தின் COVOVAX அல்லது வேறு புதிய தடுப்பூசி பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories