Corona Virus

ஒமைக்ரான் அச்சுறுத்தலிடையே கர்நாடக நவோதயா பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா ; அச்சத்தில் பெற்றோர்கள்!

நவோதயா பள்ளியில் கொரோனா பரிசோதனை நடத்தியதில் இதுவரை மொத்தம் 107 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

ஒமைக்ரான் அச்சுறுத்தலிடையே கர்நாடக நவோதயா பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா ; அச்சத்தில் பெற்றோர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தில் உள்ள நவோதயா பள்ளியில் கொரோனா பரிசோதனை நடத்தியதில் நேற்று 38 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 107 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

என்.ஆர்.புரா தாலுகா சீகோடு கிராமத்தில் உள்ள நவதோயா பள்ளியில் பயிலும் 418 மாணவ-மாணவிகளுக்கு நேற்று வரை அனைவருக்கும் பரிசோதனையிட்டதில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது வரை மொத்தம் 107 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

ஒன்றிய அரசின் பள்ளி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் அவ்வப்போது மாணவர்களுடைய நிலைமை குறித்தும் ஒன்றிய அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கொடுத்து வரும் நிலையில் தனிப்பட்ட அறையில் அனைத்து மாணவ மாணவிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் வந்து மாணவ மாணவிகளை பார்க்க முயற்சி செய்பவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருப்பதால் எந்த ஒரு பெரிய அளவிலும் இல்லாத காரணத்தினால் ஒருவார காலத்தில் குணம் அடைந்து விடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பலர் பள்ளி அருகே சென்று குழந்தைகளை பார்க்க முடியாததால் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

தற்போது மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் அப்பகுதியை சேர்ந்த மருத்துவத் துறையினர் அங்கு கூடுதல் கண்காணிப்பில் மாணவ மாணவிகளுக்கு சத்துணவுகள் மற்றும் பழரசங்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து அனைத்து மாணவ மாணவிகளும் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories