Corona Virus

ஒமைக்ரான் பாதிப்பு; வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு சுகாதாரத்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை என்ன?

தற்போது வரை தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகாரப்பூர்வமாக இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பாதிப்பு; வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு சுகாதாரத்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இதுவரை தடுப்பூசி போடப்படாத இடங்களில் தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

13ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் குறித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராதாகிருஷ்ணன். அப்போது அவர் பேசியதாவது,

தடுப்பூசி போடுவதில் தமிழகம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும் இன்னமும் தடுப்பூசி தொடர்பான ஐயங்கள், மக்களிடையே இருந்து வருகிறது இதனைப் போக்க தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விமான நிலையங்களில் இருந்து நழுவிச் செல்லும் பயணிகள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விமானங்களில் விற்கக்கூடிய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது தமிழக அரசின் கவனத்தில் உள்ளதாகவும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலையை குறைப்பதற்கு தமிழக அரசு விமான நிலையங்களுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது வரை தமிழகத்தில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்தார். இதுவரை மொத்தமாக 6 பேரை மட்டுமே ஒமைக்ரான் உள்ளதா இல்லையா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான முடிவுக்குப் பின்னரே அது பற்றிய முழு விவரம் தெரியும் என்று தெரிவித்தார்.

மழை கடுமையாக பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை அதிகரித்து நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது குறித்து சுட்டிக்காட்டி உள்ளது தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கவனத்தில் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நிதி சென்றடைவதில் சில தடுமாற்றங்கள் உள்ளதாகவும் அவை விரைந்து களையப்படும் என்றும் அவ்வாறு பாதித்தவர்கள் மக்கள் நல்வாழ்வு துறையை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories