Corona Virus

ஒமைக்ரான் வைரஸை விட இணையத்தில் வைரலாகும் அது தொடர்பான பட போஸ்டர்.. காரணம் என்ன தெரியுமா?

ஒமைக்ரான் வைரல் பரவல் குறித்து பிரபல இத்தாலிய இயக்குநர் உகோ க்ரேகொரெடி 1963ம் ஆண்டே கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒமைக்ரான் வைரஸை விட இணையத்தில் வைரலாகும் அது தொடர்பான பட போஸ்டர்.. காரணம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பெருந்தொற்று 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கியதில் இருந்து வைரஸ் பரவல் குறித்து உலகளவில் வெளியான படங்கள் மீதான மக்களின் கவனம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

தமிழகத்தில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்த காலங்களில் சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’ படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அப்போது ‘அன்றே கணித்தார் சூர்யா’ என்ற ஹேஷ்டெக் மற்றும் மீம்ஸ்கள் ட்ரெண்டாகின.

அதேபோல 2011ம் ஆண்டு வெளியான contagion படமும் கொரோனா வைரஸ் தொடர்பான அம்சங்களை கொண்டிருந்தது. அவ்வகையில் உருமாற்றமடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பற்றிய படமும் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்த ஒமைக்ரான் வைரஸின் பெயரில் 1963ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த பிரபல இயக்குநரான உகோ க்ரேகொரெடி இயக்கத்தில் ‘தி ஒமைக்ரான்’ எனும் திரைப்படம் வெளியானது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் 1963-ம் ஆண்டு வெளியான ‘ஒமைக்ரான்’ திரைப்படம் வைரஸ் பற்றிய படமில்லை. சயின்ஸ் ஃபிக்‌ஷன் பின்னணியில் உருவாகிருந்த ஒரு நகைச்சுவை படமே அது.

இத்திரைப்படத்தில், இறந்துபோன ஒரு தொழிற்சாலை ஊழியரின் உடம்பில் ஊடுருவும் ஒமைக்ரான் என்ற வேற்று கிரகவாசி அந்த உடலை உயிர் பெறச்செய்து அதன் மூலம் உலகின் நடப்புகளை அறிந்துகொண்டு, தன் இனத்தவரை உலகின் மீது போர் தொடுக்க உதவும். இதுதான் ‘ஒமைக்ரான்’ படத்தின் கதைக்களம்.

இதனால் தற்போது நிலவும் இந்த அசாதாரணமான சூழலை இந்த படத்தோடு ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. மேலும், ஒமைக்ரான் என்ற வார்த்தை ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வார்த்தை அல்ல. வானவியல் அறிவியலில், இதற்கு முன்பே நட்சத்திரக் கூட்டம் ஒன்றைக் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories