Corona Virus

எப்போதுதான் இந்த கொரோனா முடிவுக்கு வரும்? - WHO அதிகாரி சொல்லும் அதிர்ச்சி தகவல்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் போதாது என பல காரணிகளை பட்டியலிட்டுள்ளார் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி.

எப்போதுதான் இந்த கொரோனா முடிவுக்கு வரும்? - WHO அதிகாரி சொல்லும் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவின் வூஹானில் 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா பரவல் இரண்டு ஆண்டுகளை எட்டவிருக்கும் நிலையிலும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை.

இந்த கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும் உலக நாடுகளை தாக்கியுள்ளது. இப்படியான நிலையில், கொரோனா பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும் என உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

அதில், பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பணியாற்ற வேண்டும். பொது சுகாதாரத்தை முதன்மையான பணியாக நினைவில் கொள்ளவேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டாம் அலையின் போது ஏற்பட்ட நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி பயன்பாடு வைரஸுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை அடைய உதவலாம்.

ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டால்மட்டும் போதாது. அடிப்படை கொரோனா கட்டுப்படுத்தும் வழிமுறைகளான தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் போன்ற காரணிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories