Corona Virus

3ம் அலையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்? எவரெல்லாம் பாதிக்கப்படுவர்? - WHO தலைமை விஞ்ஞானி விளக்கம்

தமிழ்நாடு அரசு நடத்தி வரும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக WHO தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் பாராட்டியுள்ளார்.

3ம் அலையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்? எவரெல்லாம் பாதிக்கப்படுவர்? - WHO தலைமை விஞ்ஞானி விளக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தரமணியில் அமைந்துள்ள சாமிநாதன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி எனும் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமிய சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

”இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கும் பட்சத்தில் மூன்றாம் அலையை முழுமையாக தடுக்க முடியும்.

3ம் அலையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்? எவரெல்லாம் பாதிக்கப்படுவர்? - WHO தலைமை விஞ்ஞானி விளக்கம்

கொரோனா மூன்றாம் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதனையும் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் முழுமையாக தடுக்க முடியும். மூன்றாம் அலையில் துணை நோய் உள்ள குழந்தைகளில் 1 சதவிகிதம் பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று அறியப்பட்டு உள்ளது. ஆகையால் மூன்றாம் அலையில்  குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

மேலும் பள்ளிகள் திறப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தொற்று பரவும் என்பது முழுமையாக இருக்காது. ஆகையால் பள்ளிகளை முழுமையாகப் திறக்க, கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தொற்று பரவல் என்பது தற்போது 1 சதவீதம் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு அரசு நடத்தி வரும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories