Corona Virus

3வது அலை எச்சரிக்கை: பூஸ்டர் டோஸ் போடுவது அவசியமா? - ஒன்றிய சுகாதாரத்துறையின் அறிவுரை என்ன?

நாடு முழுவதும் 64 மாவட்டங்களில் தற்போதும் 5% க்கு மேல் பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3வது அலை எச்சரிக்கை: பூஸ்டர் டோஸ் போடுவது அவசியமா? - ஒன்றிய சுகாதாரத்துறையின் அறிவுரை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசியையும் கட்டாயம் முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் தற்போது அவசியம் இல்லை என்று ஒன்றிய அரசின் கொரோனா தடுப்புக்குழு கூறியுள்ளது.

டெல்லியில் இன்று ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா, வி.கே.பால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மக்கள் அதிகம் கூடும்போது கண்டிப்பாக கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, அக்டோபர் நவம்பர் மாத திருவிழா காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதனை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும், பொறுப்புடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் 64 மாவட்டங்களில் தற்போதும் 5% க்கு மேல் பாதிப்பு உள்ளது. கேரளாவில் பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் தெரிவித்தனர்.

அறிவியல் ரீதியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தற்போது அவசியம் இல்லை. அதனைவிட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாக போடப்படுவது என்பதுதான் முக்கியம். அதனை அனைவரும் தவறாது முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories