Corona Virus

30 நாட்களுக்குள் இறந்தால்தான் கொரோனா மரணம்: ஒன்றிய பாஜக அரசின் புது விதியால் கடுப்பான மக்கள்!

கொரோனாவால் உயிரிழப்போருக்கு நிவாரண நிதி கொடுப்பது தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நாட்களுக்குள் இறந்தால்தான் கொரோனா மரணம்: ஒன்றிய பாஜக அரசின் புது விதியால் கடுப்பான மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதித்த 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் மட்டுமே கொரோனா மரணமாகக் கருதமுடியும். விதிமுறைகளை வெளியிட்டது ஒன்றிய அரசு.

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நிவாரணம் வழங்குவது குறித்தோ, கொரொனா மரணத்தை உறுதி செய்வது குறித்தோ இதுவரை ஒன்றிய அரசு முடிவு எடுக்காததற்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டணத்தைத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசும், ஐ.சி.எம்.ஆரும் இணைந்து கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தவர்களை மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தவர்களாக கருதமுடியும். அதுவும் ஆர்.டி.பி.சி.ஆர், ரேப்பிட் டெஸ்ட், மாலிகூலர் சோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்ட 30 நாட்களில் உயிரிழந்திருக்க வேண்டும்.

கொரோனா சோதனைக்குப் பின் அது மருத்துவர் மூலமாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றிருக்க வேண்டும். மருத்துவமனையிலோ, வீட்டிலோ உயிரிழந்ததற்கான அரசு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கப்வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால்தான் அதனை கொரோனா மரணமாக ஏற்க முடியும் என்று விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

தொற்றுக்குப் பின் தற்கொலை அல்லது விபத்து மூலம் மரணமடைந்தால் அது கொரோனா மரணமாக கருதப்படாது என்று வறையறுத்து விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்திலும் நேற்று தாக்கல் செய்துள்ளனர். வழக்கு மீண்டும் அடுத்த வாரம் விசாரணக்கு வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த விதிமுறைகள் மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories