Corona Virus

''ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த மெகா திட்டம்''- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

''ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த மெகா திட்டம்''- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வருகின்ற 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மொத்தமாக 3,59,31,677 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதமும், 15 சதவீதம் பேருக்கு இரண்டம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 22,16,160 தடுப்பூசி வந்ததில் தமிழக அரசு அளித்த அழுத்தம் காரணமாக இதுவரை தனியார் மருத்துவமனைகள் மூலம் பெறப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளதால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம்.

தமிழகத்தில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் கொரோனா தொற்று உறுதியாகும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது என்றும் தொடர்ச்சியாக பள்ளிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories