Corona Virus

புழக்கத்தில் போலி கொரோனா தடுப்பூசிகள்? அடையாளம் காண்பது எப்படி? வெளியானது வழிமுறை!

போலி தடுப்பூசிகள் குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் முக்கிய வழிமுறைகளை அனுப்பியுள்ளது.

புழக்கத்தில் போலி கொரோனா தடுப்பூசிகள்? அடையாளம் காண்பது எப்படி? வெளியானது வழிமுறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளில் சில போலிகளும் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புழக்கத்தில் போலி கொரோனா தடுப்பூசிகள்? அடையாளம் காண்பது எப்படி? வெளியானது வழிமுறை!

முன்னதாக தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், போலி தடுப்பூசிகள் குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் முக்கிய வழிமுறைகளை அனுப்பியுள்ளது. உண்மையான தடுப்பூசிகளை எப்படி அடையாளம் காண்பது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.

கோவிஷீல்டு:

புழக்கத்தில் போலி கொரோனா தடுப்பூசிகள்? அடையாளம் காண்பது எப்படி? வெளியானது வழிமுறை!

SII (Serum Institute of India) என்ற லேபிள் இருக்கும்.

லேபிளின் நிறம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் (shade: Pantone 355C). அலுமினியம் ஃபிளிப்-ஆஃப் முத்திரையின் நிறம் அடர் பச்சை

பிராண்ட் பெயர் மற்றும் வர்த்தக முத்திரை ‘கோவிஷீல்ட்’ என இருக்கும். தடுப்பூசியின் பெயர் சாதாரண எழுத்துருவில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.

(Recombinant) என மருந்தின் பெயரின் முடிவில் அச்சிடப்பட்டிருக்கும். CGS விற்பனைக்கு இல்லை என்று லேபிளில் எழுதப்பட்டிருக்கும்.

SII இன் லோகோ ஒரு தனித்துவமான கோணம் மற்றும் நிலையில் அச்சிடப்பட்டுள்ளது. இது சரியான விவரங்களை அறிந்த ஒரு சிலரால் மட்டுமே அடையாளம் காண முடியும். எழுத்து வெள்ளை மை கொண்டு அச்சிடப்பட்டுள்ளது.

கோவாக்சின்:

புழக்கத்தில் போலி கொரோனா தடுப்பூசிகள்? அடையாளம் காண்பது எப்படி? வெளியானது வழிமுறை!

லேபிளில் கண்ணுக்கு தெரியாத UV ஹெலிக்ஸ் உள்ளது, இது UV ஒளியின் கீழ் (UV helix) மட்டுமே தெரியும். இது DNA போன்ற ஒரு அமைப்பு ஆகும்

கோவாக்சின் என்று எழுதப்பட்டிருக்கும் லேபிளின் கீழ் மைக்ரோ உரை மறைக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் X இல் பச்சை படலம் இருக்கும்.

கோவாக்ஸின் எழுதப்பட்ட லேபிளில் ஒரு ஹாலோகிராபிக் விளைவு இருக்கும்.

ஸ்புட்னிக் வி:

புழக்கத்தில் போலி கொரோனா தடுப்பூசிகள்? அடையாளம் காண்பது எப்படி? வெளியானது வழிமுறை!

ரஷ்ய மருந்தான இதில் இரு வெவ்வேறு லேபிள்கள் இருக்கும். தடுப்பூசியின் குப்பியில் ஒரே தகவலும் வடிவமைப்பும் இருக்கும்.

உற்பத்தியாளரின் பெயர் மட்டுமே மாறுபட்டிருக்கும். ஸ்புட்னிக் வி அட்டையின் முன் மற்றும் பின் புறத்தில் தவிர மற்ற இடங்களில் ரஷ்ய மொழியிலேயே லேபிள் இருக்கும்.

banner

Related Stories

Related Stories