Corona Virus

கேரளாவை விடாத வைரஸ்; தடுப்பூசிக்கு அடங்காத C.1.2 Corona -அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் தகவல் என்ன?

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரளா எல்லையோர 9 மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவை விடாத வைரஸ்; தடுப்பூசிக்கு அடங்காத C.1.2 Corona -அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் தகவல் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடுவின்கரை மாநகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், முதியவர்கள், கைம்பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்படும் போதே கேரள-தமிழக எல்லையில் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியபட்ட நிலையில் தமிழக கேரள எல்லையோர 9 மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 3 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரத்து 70 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் புதிய உச்சமாக 6 லட்சத்து 20 ஆயிரத்து 225 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி தமிழகத்தில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

நோய் தொற்று அதிகம் உள்ள 9 மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் திறப்பால் பெருமளவில் இதுவரை நோய் தொற்று கண்டறியப்படவில்லை. நோய் தொற்று கண்டறியப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது‌.

தடுப்பூசிக்கு கட்டுப்படாத சி .1.2 வகை கொரனோ வைரஸ் உலக அளவில் 9 நாடுகளில் பரவிய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகள் மீதான பாதிப்பு 6 முதல் 10 சதவீதமாக உயர்ந்தாலும் குழந்தைகள் உயிரிழப்பு தமிழகத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான நோய் பரவலை கட்டுப்படுத்திட தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories