இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மூன்றாவது அலை உச்சம் தொடும் என பல்வேறு எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருவது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வகையில் புதிதாக 1,56,386 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், 1,573 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் ஒரே நாளில் 1,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக கோவையில் 181, சென்னையில் 170, ஈரோட்டில் 130, செங்கல்பட்டில் 90, சேலத்தில் 73, திருப்பூரில் 72, திருவள்ளூரில் 71 பேர் என புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதில், 22 மாவட்டங்களில் புதிதாக எந்த இறப்பும் பதிவாகவில்லை.
இதனையடுத்து மொத்தமாக இதுவரையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 788 ஆக உள்ளது. இருப்பினும் 18 ஆயிரத்து 352 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போர்க்கால நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும் கொரோனா பரவல் தடுப்பதை தி.மு.க. அரசு சிறப்பு சிறப்பாக கையாண்டு வருவதாகவும் பொதுமக்கள்மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.