Corona Virus

வார் ரூம், வேக்சின் நிறுவனம் என அடுத்தடுத்து அதிரடியில் தி.மு.க அரசு.. புதிதாக வருகிறது வைரஸ் ஆய்வகம்!

விரைவில் உருமாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் டிஎம்எஸ் வளாகத்தில் துவங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வார் ரூம், வேக்சின் நிறுவனம் என அடுத்தடுத்து அதிரடியில் தி.மு.க அரசு.. புதிதாக வருகிறது வைரஸ் ஆய்வகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்வதற்கான மின்கல வாகனத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் இயக்கமாக செயல்பட்டு ஏராளமான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எஸ்.கே.சி.எல் தனியார் நிறுவனம் 5 லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவித்த பன்னோக்கு மருந்துவமனை கிண்டி கிங் வளாகத்தில் துவங்க உள்ளது. அதற்கு இந்த பேட்டரி வாகனம் பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.

தொற்றா நோய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று மருத்துவம் வழங்கப்படும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 58,341 பேர் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், 36,765 நீரிழிவு நோயாளிகளுக்கும், இரு நோய்களும் பாதிக்கப்பட்ட 25,787 பேருக்கும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 18 பேருக்கு சுய டயாலிசிஸ் கருவியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,28,361 பேர் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இதுவரை 39,08,250 கோவேக்சின் டோஸ் வந்துள்ளது. 36,31,540 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 4 லட்சம் பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்ததும் இரண்டாம் தவனை செலுத்த வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்படும். தற்போது கோவாக்சின் முதல் தவனை யாருக்கும் செலுத்தப்படுவதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

விரைவில் உருமாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் டிஎம்எஸ் வளாகத்தில் துவங்கப்பட உள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 10ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, வரைமுறை செய்யப்படாததால், சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது கோரிக்கை போராட்டம் என்பது வாடிக்கையாகியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு சுகாதாரத்துறையில் ஒவ்வொரு துறையாக அழைத்து பேசி காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories