Corona Virus

கோவை, திருப்பூரை அடுத்து சேலத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமல் : அவை எவையெவை?

கொரோனா பரவல் காரணமாக சேலம் மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, திருப்பூரை அடுத்து சேலத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமல் : அவை எவையெவை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டத்தில் கொரானா பரவலைத் தடுக்க நாளை (ஆக.,09) முதல் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரானாவை கட்டுப்படுத்த நாளை முதல் 23ஆம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில், பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்திலுள்ள மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வார சந்தைகளான கொங்கணாபுரம் வாரச் சந்தை, வீரகனூர் வாரச்சந்தை ஆகிய இரண்டு சந்தைகளுக்கும் தடை வைத்திருப்பதாகவும், மேட்டூர் அணை பூங்கா வரும் 23-ஆம் தேதி வரை திறக்க தடை வைத்திருப்பதாகவும், ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்ல தடை விதித்து இருப்பதாகவும் மற்ற தினங்களில் ஏற்காட்டிற்கு செல்வோர் தடுப்பூசி இரண்டு தவணைகளில் செலுத்தி அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை எச்சரிக்கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories