உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், அரநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறையை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் பாலூட்டும் அறை மிக விரைவில் திறக்கப்படும் எனவும் , 24 தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டில் கூடுதலாக 12 மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் திறக்கப்பட உள்ளது என்றார்.
மேலும் செப்டம்பர் மாதம் மத்தியில் தமிழகத்தில் கொரனோ மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்புள்ளது என்றும் 42,000 வரை தினசரி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐஐடி கணிப்பு தெரிவித்த நிலையில் ஐஐடி , எய்ம்ஸ் உட்பட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், அண்டை மாநிலங்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லை பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர் தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என கூறினார்.
உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்த அவர் இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பாலும் 10 பேர் டெல்டா + வகை பாதிப்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர், ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி எனும் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.