கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து மெல்ல மெல்ல இந்தியா மேலெழுந்து வரும் நிலையில் மூன்றாவது அலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகமாகி வரும் பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டில் பதிவாகும் ஒரு நாள் கொரோனா பாதிப்புகளில் 47.5 சதவிகித பாதிப்பு 18 மாவட்டங்களில் பதிவாவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி கேரளாவில் 10 மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவில் 3, மணிப்பூரில் 2, அருணாச்சல பிரதேசத்தில் 1, மேகாலயாவில் 1, மிசோரமில் 1 என 18 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதத்திலேயே தினசரி தொற்று ஒரு லட்சத்தை எட்டும் என ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் 18 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது மக்களிடையே வாழ்வாதாரம் குறித்த அச்சம் மேலோங்கியுள்ளது.