Corona Virus

கொரோனா 3.0. இன்னும் ஒரு மாசம்தான்; வைரஸ் பரவல் உச்சமடையும் ஆனால்.. IIT வல்லுநர்களின் எச்சரிக்கைகள் இதோ!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சத்தை அடையும் என ஐஐடி வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா 3.0. இன்னும் ஒரு மாசம்தான்; வைரஸ் பரவல் உச்சமடையும் ஆனால்.. IIT வல்லுநர்களின் எச்சரிக்கைகள் இதோ!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏப்ரல், மே மாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, படிப்படியாகக் குறைந்தது. இதையடுத்து ஊரடங்குகளில் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வந்தன.

இதையடுத்து நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 40,134 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் 422 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்று 40 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது.

இந்தியாவில் 46 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக 10% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகப் படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில் ஆகஸ்ட் மாதத்திலேயே தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருக்கும் என ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா 3.0. இன்னும் ஒரு மாசம்தான்; வைரஸ் பரவல் உச்சமடையும் ஆனால்.. IIT வல்லுநர்களின் எச்சரிக்கைகள் இதோ!

இது குறித்து ஐஐடி ஹைதராபாத் ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் ஆகியோர் கொரோனா மூன்றாவது அலை குறித்து ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில், "கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகும் தொற்று எண்ணிக்கையைப் பார்க்கும் போது ஆகஸ்ட் மாதத்திலேயே கொரோனா மூன்றாவது அவலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது. அதேபோல் கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனால் மூன்றாவது அலையில் உயிரிழப்பு இருக்காது" என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories