Corona Virus

”RT PCR சோதனை; 13 நிமிடத்தில் ரிசல்ட்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் அசத்தல் தகவல்!

விமான நிலையத்தில் 13 நிமிடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

”RT PCR சோதனை; 13 நிமிடத்தில் ரிசல்ட்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் அசத்தல் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் கேரளாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்துள் அனுமதியளிக்கப்படும்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் விமானநிலைய அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு , வெளி மாநில விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை விவரங்களை நேரில் பார்த்தறிந்தோம்.

பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் உடல் வெப்ப பரிசோதனையோடு சேர்த்து ஆர்.டி.பி சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு 900 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது.

13 நிமிடங்களில் பரிசோதனை முடிவை அறிவிப்பதற்கான முயற்சி ஓரிரு நாளில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் மூன்று நாட்களாக தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆரம்ப நிலையிலேயே தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

வரும் 5 ம் தேதி அதிகாலை முதல் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோவை , குமரி உட்பட அனைத்து கேரள எல்லைகளிலிருந்தும் வருபவர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கட்டாயமாகும். கேரளாவிலிருந்து ரயில் , சொந்த வாகனத்தில் வருவோர் அனைவருக்கும் இது பொருந்தும்.

முதுகலை மருத்துவ கவுன்சிலிங் பழைய நடைமுறையிலேயே தொடர வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே 9 குறுகலான இடங்களில் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது, அறநிலையத்துறை நடவடிக்கை மூலம் கோயில்களில் கூட்டம் கூடுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories