Corona Virus

”கொரோனா நம்மை சுற்றிதான் உள்ளது; விதிமுறைகளை பின்பற்றாது போவது ஆபத்தானது” - ஒன்றிய சுகாதாரத்துறை வார்னிங்

மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்காவா தெரிவித்துள்ளார்.

”கொரோனா நம்மை சுற்றிதான் உள்ளது; விதிமுறைகளை பின்பற்றாது போவது ஆபத்தானது” - ஒன்றிய சுகாதாரத்துறை வார்னிங்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 80% கொரோனா பாதிப்பு 90 மாவட்டங்களில் மட்டுமாகக் குறைந்துள்ளது. மே 4 ஆம் தேதி 4.14 லட்சமாக இருந்த தினசரி பாதிப்பு 34 ஆயிரமாக குறைந்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தைகளில், சுற்றுலா பகுதிகளில், பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் பொதுமக்கள் நடமாடுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தொலைக்காட்சிகள் விளிப்புணர்வு செய்திகளை அதிகரிக்க வேண்டும்.

83% மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது. இது ஆபத்தானது. கொரோனா வைரஸ் இன்னும் நம்மைச் சுற்றி உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, கொரோனா விதிமுறைகளைப் பொதுமக்கள் கைவிடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாநில அரசுகள் சோதனைகளைத் தொடர வேண்டும் எனக் கூறியுள்ள அவர், வட கிழக்கு மாநிலங்கள் சோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். கோவாக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories