Corona Virus

திமுக அரசின் சீரிய நடவடிக்கையால் குறைந்தது கொரோனா; கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமானது சென்னை!

சென்னையில் ஒரு பகுதியில் கூட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளன.

திமுக அரசின் சீரிய நடவடிக்கையால் குறைந்தது கொரோனா; கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமானது சென்னை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகரில் கொரோனா தொற்று பரவலின் வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட பேருக்கு தொற்று உறுதியானால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்படுகிறது. தற்போது நோய் தொற்று எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து 2446 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், எந்த ஒரு பகுதியிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இல்லாததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமாக சென்னை மாநகராட்சி மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 132 இடங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளதாகவும் ஒவ்வொரு இடத்திலும் ஐந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தொற்று உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிப்புகள் உள்ள குறிப்பிட்ட இடங்களில் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கண்கானிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு தளர்வுகளில் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories