Corona Virus

இன்னும் கொரோனா முற்றுப்பெறவில்லை; நாட்டில் 12 மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் பாதிப்பு - ஒன்றிய சுகாதாரத்துறை

இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிவதை உறுதிபடுத்த வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்னும் கொரோனா முற்றுப்பெறவில்லை; நாட்டில் 12 மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் பாதிப்பு - ஒன்றிய சுகாதாரத்துறை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிவதை உறுதிபடுத்த வேண்டும். தொற்று உள்ள இடங்களை மட்டும் கண்டறிந்து சிறு கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து கண்காணிக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் தடுப்பூசி போடுவது என்பது மாரத்தான் ஓட்டம். தடுப்பூசி தயாரிப்பை மேலும் எப்படி அதிகரிப்பது என்று நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சுகாதார மற்றும் நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால், முன் எச்சரிக்கையுடன் இருந்தால் மூன்றாம் அலை வருவதைத் தடுக்கலாம். ஆனாலும், மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என கூறியுள்ளார்.

தொற்று குறையாமல் உள்ள 6 மாநிலங்களுக்கு மத்தியக்குழு அனுப்பப்பட்டுள்ளது. 216 கோடி தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் போடப்படும் என்று நம்பிக்கையின் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிறுவனங்கள் உறுதியளிதத்தன் அடிப்படையில் அந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 12 மாநிலங்களில் 56 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories