Corona Virus

கோவிட் பலி: குடும்பத்தாருக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்க உறுதி செய்க -ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை

கோவிட் பலி: குடும்பத்தாருக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்க உறுதி செய்க -ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச இழப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து ஆறு வாரங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்கிற பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கோவிட் பலி: குடும்பத்தாருக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்க உறுதி செய்க -ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை

நிதி ஆதாரத்தைக் கருத்தில் கொண்டு இவ்வளவு தொகை நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவது சரியானதாக இருக்காது என்பதால் அரசே முன்னுரிமை அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்டவற்றிற்கான முன்னுரிமைகளைக் கணக்கில் கொண்டு நிவாரணத்தை முடிவு செய்ய வேண்டும். காப்பீடு வழங்குவது மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கும் ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அசோக் பூஷன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories